எதிர்பாராமல் வாழ்த்து பெற்ற திருமண தம்பதிகள்!

Photo of author

By Parthipan K

காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், புதியதாக திருமணமான தம்பதியினரை சாலையில் சந்தித்ததும் காரில் இருந்து இறங்கி திருமண வாழ்த்து தெரிவித்தார்.

சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

மேலும், இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வடசென்னை பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். பின்னர் அங்கு இருக்கும் கண்ணதாசன் நகர் E B சாலை சந்திப்பில் கௌரி சங்கர் , மகாலட்சுமி தம்பதியினர் மாலையுடன் நின்று கொண்டிருந்தனர்.

உடன் இருந்த இளைஞர்கள்திருமண வாழ்த்து கூறி குரல் கொடுத்ததால், இதை பார்த்த முதலமைச்சர் காரில் இருந்து இறங்கி மணமக்களை வாழ்த்தி, அன்பளிப்பும் வழங்கினார்.இதை சற்றும் எதிர்பாராத தம்பதியினர் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியில் திகைத்தனர்.