சேலம் ஆத்தூர் ஏரியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்!

0
156

சேலம் ஆத்தூர் ஏரியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தாலுகாவில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஏரியில் கிடந்த  சம்பவம் அங்குள்ள மக்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வாலிபரின் கழுத்து நெரிக்கப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொட்டவாடி ஏரி அங்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற மக்கள் அங்கு 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்று அருகில் உள்ள ஏத்தாப்பூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏத்தாப்பூர் காவல் நிலைய போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய்களை கொண்டு கொல்லப்பட்டது யார்? எதற்காகக் கொன்றார்கள்? காதல் விவகாரமா? இல்லை வேறு பிரச்சனையா? என்ற விசாரணையின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மக்கள் செல்லும் வழியில் இதுபோன்று அடித்துக் கொல்லப்பட்டு ஆணை வீசி சென்ற சம்பவம் ஆத்தூர் மக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஉலக பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் இவருக்கா?
Next article“காதலால் தற்கொலை செய்வதால் காதலை தடை செய்ய முடியுமா?” ஆன்லைன் வகுப்பு குறித்து எச் ராஜா ஆவேசம்