விரைவில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்!

Photo of author

By Sakthi

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் எதிர்வரும் 31ம் தேதி ஆரம்பித்து வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி 2021 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது.

முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 31ம் தேதியிலிருந்து பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது, அதேபோல இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் மாதம் 11 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.