தேனியில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டம்! எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தெரியுமா?

0
283
Union Committee meeting held in Theni! Do you know how many resolutions were passed?
Union Committee meeting held in Theni! Do you know how many resolutions were passed?
தேனியில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டம்! எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தெரியுமா?
தேனி மாவட்டம், தேனி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் ம.சக்கரவர்த்தி  தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் முருகன் , வட்டார வளர்ச்சி அலுவலர் ( வளர்ச்சி  பிரிவு) ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஞான திருப்பதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இந்த கூட்டத்தில், தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் சுதா லட்சுமி தீர்மான நகலை வாசித்தார்.
மொத்தம் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர்கள் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு பொது மக்களின்  கோரிக்கைகளை, அந்தந்த பகுதிகளில் உள்ள குறைகளை, மன்ற கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் முன் வைத்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள்  முன் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஒன்றியக் குழு பெருந்தலைவர் சக்கரவர்த்தி தெரிவித்ததையடுத்து, கூட்டம் நிறைவடைந்தது.
Previous articleஅம்மாடியோ இம்புட்டு விலையா??நம்பவே முடியல! அதுல அப்படி என்ன இருக்கு??
Next articleபெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்தாவரா? இதோ முதல்வர் தரும் அசத்தல் விருது! இதை பெற எங்கே எப்படி விண்ணப்பிக்க வேண்டும்!