மத்திய அரசுக்கு வானதி சீனிவாசன் எழுதிய அவசரக் கடிதம்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நடைபெற்று நாட்கள் செல்ல செல்ல அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சட்ட சபை உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் கோயமுத்தூர் தெற்கு சட்டசபை உறுப்பினர்கள் வானதி சீனிவாசன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலையில் தமிழ்நாடு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கோவை மாவட்டம் இதுவரையில் இல்லாத அளவிற்கு தொற்றுப் பரவலில் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இந்த நோயைத் தடுப்பதில் ஈடுபட்டிருக்கின்ற சுகாதாரத் துறையில் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோயமுத்தூர் தொழில்துறை நகரம் என்பதால் 70சதவீதத்திற்கும் மேலான மக்கள் தொழில் துறையை சார்ந்தவர்கள் என்ற காரணத்தால், கோவையில் தடுப்பூசி போடுவதற்காக உடனடித் தேவை ஏற்பட்டிருக்கிறது. அதிகரித்து வரும் நோய்த்தொற்று காரணமாக இந்த பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக பாதித்திருக்கிறது. அதோடு பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், மாநில அரசுக்கு உதவி புரிவதற்கும் மற்றும் நெருக்கடியை திறனுடன் கையாள்வதற்கும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு தமிழ் நாட்டிற்கு அனுப்பப் படவேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தி இருக்கிறார்.

அதோடு அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டும். அவற்றில் குறிப்பிடத்தக்க அளவை கோயம்புத்தூருக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் வானதி ஸ்ரீனிவாசன்.