மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

Photo of author

By Parthipan K

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த கொரோனா தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://twitter.com/smritiirani/status/1321436270736875524?s=20

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது எனக்கு தொற்று இருப்பது உறுதியானது. மேலும், கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.