மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்திப்பு

Photo of author

By Anand

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்திப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை திடீரென சந்தித்து பேசி உள்ளார்.

இந்த சந்திப்பின் பொழுது இருவரும் அதிமுக பாஜக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இருவரும் தமிழக அரசியல் நிலவரம், தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளதாக பாஜக வட்டார தகவல். எனினும் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கிட்டு குறித்தான விவாதங்கள் டெல்லியில் நடைபெற்று வருவதாகவே கருதப்படுகிறது.அடுத்தடுத்து வரும் நாட்களில் அதிமுக பாஜக கூட்டணி குறித்தான மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.