பன்னீர்செல்வத்தை சந்தித்த ஒன்றியச் செயலாளர்! சால்வை அணிவித்து மரியாதை!

Photo of author

By Rupa

பன்னீர்செல்வத்தை சந்தித்த ஒன்றியச் செயலாளர்! சால்வை அணிவித்து மரியாதை!
பெரியகுளம் அருகே கைலாசபட்டி ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் ப.சுப்பிரமணியன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் OPS  அவர்களை சந்தித்து வந்துள்ளனர்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு  சொந்தமான பண்ணை வீட்டில்  திண்டுக்கல் மாவட்டம் அதிமுக வேடசந்தூர் ஒன்றிய செயலாளர்  ப.சுப்பிரமணி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வந்தனர்.
இந்நிகழ்வில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் பசும்பொன், பழனி  முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம்,நிலக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள்  உடன் இருந்தனர்.