பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு திடீர் ரத்து! மாணவர்களே இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

0
220
University semester exam suddenly canceled! The date for this will be announced later!
University semester exam suddenly canceled! The date for this will be announced later!

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு திடீர் ரத்து! மாணவர்களே இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

சென்னை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு தற்போது நடை பெறுகின்றனர்.

இந்நிலையில் இளங்கலை மாணவர்களுக்கான மூன்றாவது செமஸ்டர் தமிழ் தேர்வானது இன்று காலை நடைபெற இருந்தது.இந்நிலையில் மாணவர்கள் தேர்விற்கு தயாராகி தேர்வு அறைக்கு சென்றனர்.

அவர்களுக்கான வினாத்தாள் வழங்கப்பட்டது.ஆனால் அவை நான்காவது செமஸ்டர் தமிழ் தேர்வுக்கான வினாத்தாள் வழங்கப்பட்டது.இன்று மூன்றாவது செமஸ்டர் தேர்வெழுத சென்ற மாணவர்களுக்கு அடுத்த முறை எழுத வேண்டிய தேர்வுக்கான கேள்விகள் வந்ததால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்து நின்றனர்.

இவ்வாறு தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டதால் இந்த குறிப்பிட்ட செமஸ்டர் தேர்வு மட்டும் ரத்து செய்யப்பட்டது.இந்த தேர்வு பின்னர் நடத்தப்படும் என சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

Previous articleமக்களே இதோ உங்களுக்காக! ஓட்டு போடும் முறை தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்!
Next articleஇந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் எந்தெந்த இடங்களுக்கு தெரியுமா?