வீட்டிற்கு தெரியாமல் 5 மாத புள்ளதாச்சியாக மாறிய சிறுமி! திடீர் வயிற்று வலியால் வெளிவந்த உண்மை!

Photo of author

By Parthipan K

வீட்டிற்கு தெரியாமல் 5 மாத புள்ளதாச்சியாக மாறிய சிறுமி! திடீர் வயிற்று வலியால் வெளிவந்த உண்மை!

சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் 17 வயதேயான சிறுமி இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். படிப்பில் ஆர்வம் இல்லாத காரணத்தினால் அச்சிறுமி அவ்வூரிலுள்ள கிளினிக் ஒன்றில் ஒன்பது மாதங்களுக்கு முன் வேலை செய்து வந்துள்ளார்.அப்போது சங்ககிரி சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் விஜய். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவராக உள்ளதால் அவ்வப்போது பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளைடைவில் நெருக்கமானது.பின்னர் அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறினார். அவற்றை நம்பி அச்சிறுமி அவருடன் அவ்வப்போது வெளியில் சென்று வந்துள்ளார். அப்போது ஈரோடு அழைத்துச் சென்ற கார்த்திக் விஜய் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

இதில் அந்தச் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.சில மாதங்களில் அச்சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. பின்னர் அவரது தாயார் சங்ககிரி அருகே உள்ள அரசு சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் என்று மருத்துவரிடம் காண்பித்துள்ளார். அச்சிறுமியை பரிசோதித்த டாக்டர் 5 மாத கர்ப்பமாக உள்ளதாக சிறுமியின் தாயாரிடம் கூறியுள்ளார்.

பின்னர் இச்செய்தியைக் கேட்ட விஜய் உறவினர்கள் நேற்று காலை ஆறு முப்பது மணி அளவில் சங்ககிரியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது.இச்செய்தியைக் கேட்ட சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் சிறுமியை கர்ப்பமாக்கிய கார்த்திக் விஜய் மற்றும் குழந்தை திருமணம் செய்து வைத்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். போலீசாரின் விசாரணையில் கார்த்திக் விஜய் உட்பட இரண்டு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு மேற்கொண்டு மேலும் விசாரித்து வருகின்றனர்.