பெரியவர்கள்,சிறியவர்கள் அனைவரும் வயிற்றுவலி பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.இந்த
வயிற்றுவலி பாதிப்பில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் போட்டு கொதிக்க வையுங்கள்.
இந்த பெருஞ்சீரக பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.பின்னர் இந்த பானத்தை வடிகட்டி தேன் கலந்து குடியுங்கள்.இவ்வாறு தினமும் இந்த பானத்தை பருகி வந்தால் வயிற்று வலி பாதிப்பு முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை வடிகட்டி பருகினால் வயிற்றுவலி முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வேப்பிலை பொடி போட்டு கொதிக்க வையுங்கள்.
இந்த வேப்பிலை பானத்தை வடித்து பருகி வந்தால் வயிற்று வலி முழுமையாக குணமாகும்.