வெற்றி காணாத ரஜினி படம்!! ரீமேக் செய்து ஹிட் கொடுத்த இயக்குனர்!!

Photo of author

By Gayathri

பொதுவாக தமிழில் வெற்றி கண்ட திரைப்படங்களை மற்ற மொழிகளான ஹிந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து அல்லது ரீமேக் செய்து வெளியிடுவது அனைவரும் அறிந்ததே. அதேபோல்தான் தமிழிலும் பல படங்கள் வேற்று மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த பதிவில் நாம் காணக்கூடிய படமானது தமிழ் மொழியில் வெளியாகி மீண்டும் தமிழ் மொழியிலேயே ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 1980 களில் வெளியான பில்லா திரைப்படம் ஆனது ரஜினியின் உடைய நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை காணாத நிலையில் அந்த திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் அதே தலைப்பில் அஜித் அவர்களை வைத்து மிகப்பெரிய வெற்றியைக் கண்டது.

இதுகுறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-

ரஜினி சார் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆன பில்லா சரியாக ரசிகர்களின் இடம் சென்று சேரவில்லை. மேலும் ரஜினி நடித்த பில்லா திரைப்படத்தை ரீமிக்ஸ் செய்து நடிக்குமாறு ரஜினி அவர்களே தான் ஐடியா கொடுத்து இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

சூழல் இப்படி இருக்க விஷ்ணுவர்தன் அவர்கள் ரஜினி சார் நடித்த பில்லா திரைப்படம் சரியாக கூடாத காரணத்தால் அந்த படத்தையே நான் ரீமேக் செய்ய நினைத்தேன். மேலும் அந்த திரைப்படத்திலிருந்து எனக்கு என்னென்ன பிடித்ததோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவைகளில் என்னுடைய ஸ்டைலை நுழைத்து திரைக்கதை எழுதினேன். அதனால் தான் இந்த திரைப்படமானது வெற்றி பெற்றது என தெரிவித்திருந்தார்.

இயக்குனர் விஷ்ணுவர்தனின் உடைய இந்த விமர்சனமானது ரசிகர்களிடையே அதிலும் குறிப்பாக ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.