பயன்படுத்தாத ரேஷன் கார்டுகள் முடக்கம்.!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

0
132

ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை முடக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதில் கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்களின் குடும்ப அட்டைகள் விரைவில் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பொது மக்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் டெல்லி அரசு நடைமுறைப்படுத்த மும்முரம் காட்டி வருகின்றது. அதன் நோக்கமும் ஏழை மக்கள் பயனடைய வேண்டும் என்பதுதான் ரேஷன் பொருட்கள் தவறானவர்களின் கைகளுக்கு சென்று விடாமல் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் அனுமதி அளிக்க மறுத்து விட்டதால் திட்டம் அப்படியே செயல்படுத்தாமல் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஏராளமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதனால் ரேஷன் கார்டு கணக்கெடுக்கும் பணியை அம்மாநில அரசு மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அதனைத்தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் ரேஷன் கார்டுகள் முடக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleபெங்களூர் அணியின் டாப் 2 கனவை கலைத்த ஹைதராபாத் த்ரில் வெற்றி.!!
Next articleமீண்டும் தள்ளிப் போகிறதா பள்ளிகள் திறப்பு.? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை.!!