உத்திரப்பிரதேச முதல்வருக்கு உறுதியானது கொரோனா தொற்று!

Photo of author

By Sakthi

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கும் இரவு நேர ஊரடங்கு கூறப்பட்டு இருக்கிறது. அதோடு வருடங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் நாடு முழுவதிலும் நோய்த்தொற்று தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த நிலையில், நாடு முழுவதிலும் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் தொற்று தடுப்பூசி திருவிழா தொடங்கி இருக்கிறது.இந்த நிலையில், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.இதனை அடுத்து அவர் தன்னை தனிமைபடுத்திக்கொண்டிருக்கிறார்.