வீட்டுக்குள் புதையல்! 22 லட்சம் கோவிந்தா போட்ட போலி ஆசாமி!

0
86
Treasure in the house! 22 lakh Govinda fake Asami!
Treasure in the house! 22 lakh Govinda fake Asami!

வீட்டுக்குள் புதையல்! 22 லட்சம் கோவிந்தா போட்ட போலி ஆசாமி!

வீட்டில் அல்லது கடைகளில் நட்டம் ஏற்பட்டால் அதை தீர்பதற்கான வழிகளை பார்க்காமல் மக்கள் கண்மூடி தனமாக போலி ஆசாமிகளை தேடி சென்றுவிடுகின்றனர்.அப்படி செல்லும் போது நட்டம் அடைந்ததை விட பல லட்சம் ரூபாய் பரிகாரம் என்னும் பேரில் கொடுத்து ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர்.அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அறியன்பித்தம் பட்டியில் வசிப்பவர் தான் தங்கவேல்.இவருக்கு வயது 50 ஆகும்.இவர் அந்த ஊரில் அவரது சொந்த நிலத்திலேயே விவசாயம் செய்து வருகிறார்.

இவர் செய்யும் விவசாயத்தில் ஓராண்டுக்கு முன் பெருமளவு நஷ்டம் அடைந்துள்ளார்.அத்தோடு தொடர்ந்து அவருக்கு நட்டம் ஏற்படவே தனது நேரம் தான் ஏதும் சரியில்லை என யோசித்து ஜாதகம் பார்க்கலாம் என முடிவெடுத்துள்ளார்.அப்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா மடத்துக்குளம் அருகே உள்ள கனியூரை சேர்ந்த ஜோதிடர் சசிகுமார் என்பவர் நன்றாக ஜோதிடம் பார்ப்பதாக கூறியுள்ளனர்.

அதைக்கேட்ட தங்கவேல் கனியூர்-க்கு சென்றார்.ஜோதிடர் சசிகுமாரை சந்தித்து தொழிலில் நட்டம் அடைந்ததை பற்றிக் கூறியுள்ளார்.அதற்கு ஜோதிடர் சசிகுமார் பரிகாரம் செய்யுமாறு தெரிவித்துள்ளார்.அதுவும் அந்த பரிகாரம் தங்கவேல் வீட்டில் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.அதன்பின் அந்த பூஜைக்கு ரூ.1 லட்சம் தரும்படியும் சசிகுமார் கேட்டுள்ளார்.இவர் கூறுவதை செய்தால் தொழில் பெருகும் என நினைத்து தங்கவேல் அவர் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டார்.

அதன்பின் தங்கவேல் வீட்டிற்கு ஜோதிடர் சசிகுமார் வந்தார்.மேலும் பூஜைக்கு ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.முதல் முறை தங்கவேலின் வீட்டிற்கு வந்த அந்நாளே வீட்டில் இருக்கும் அனைத்தையும் ஜோதிடர் சசிகுமார் நோட்டம் விட்டு சென்று விட்டார்.முதல் பூஜை முடிந்த அடுத்த நாளே மீண்டும் தங்கவேலின் வீட்டிற்கு வந்து உங்கள் தோட்டத்தில் புதையல் உள்ளது என ஆசை வார்த்தைகள் கூறி பேசியுள்ளார்.

தங்கவேலும் அவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பினார்.அதன்பின் அந்த புதையலை எடுக்க வேண்டுமென்றால் சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு அந்த பூஜைக்கென்று ரூ.22 லட்சத்தை வாங்கியுள்ளார்.அதுமட்டுமின்றி தங்கவேலின் வீட்டிலிருந்த கார்,மோட்டார் பைக்,விலைமதிப்புள்ள செல்போன் என அனைத்தையும் வாங்கிக்கொண்டார்.அதன்பின் அந்த வீட்டின் பெண்களிடமும் புதையல் என்ற ஆசை வார்த்தை கூறி 45 சவரன் நகையை பூஜைக்கென்று வாங்கியுள்ளார்.

இப்படியே சிறிது மாதம் புதையல் எடுக்காமல் தாமதம் செய்ததால் தங்கவேல் பெருத்த ஏமாற்றத்தை அடைந்தார்.அதன்பின் ஜோதிடர்  சசிகுமாரிடம் வாங்கிய அனைத்து பணம் மற்றும் நகைகளை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.அதற்கு சசிகுமார் நான் நாளை புதையல் எடுத்து தருகிறேன் இல்லையென்றால் அனைத்து பொருட்களையும் திருப்பி தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.ஆனால் அவர் புதையல் எடுத்து தரவில்லை.அதற்கு அடுத்த நாள் தன்னுடன் நான்கு நபர்களை கூட்டி வந்து புதையல் எல்லாம் எடுத்து தர முடியாது நீங்கள் மீறி கேட்டல் மாந்திரீகம் செய்து கை,கால்கள் செயல்படாது வகையில் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த தங்கவேலின் குடும்பத்தினர்,அடுத்த நாள் தங்கவேல் உறவினர்களுடன் ஜோதிடர் சசிகுமார் வீட்டிற்கு சென்று பொருட்களை கேட்டுள்ளார்.அப்போது சசிகுமார் பைக்,கார் மற்றும் பணம் 2 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார்.மீதமுள்ள நகை,22 லட்சம் பணம் தரவில்லை.அதற்கு பிறகு காவல் துறையில் முதலில் தங்கவேல் வழக்கு கொடுத்துள்ளார்.அவர்கள் கண்டுகொள்ளாத போது நீதிமன்றத்தில் மனு தாக்குதல் செய்தார்.

இதனை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்ட் ஆறுமுகம் தலைமையில் இன்ஸ்பெக்டர் பானுமதி மற்று சப் இன்ஸ்பெக்டர் சேகர் பவுல்ராஜ் ஆகியோர் ஜோதிடர் சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.மேலும் தனிப்படை அமைத்து ஜோதிடர் சசிகுமாரை கைது செய்தனர்.மேலும் ஜோதிடருடன் வந்து தங்கவேலை மிரட்டிய அந்த நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.