இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டங்களில் சேமிப்பு என்பது பெரும்பாலானோர் வீடுகளில் கனவாக மட்டுமே மாறக்கூடிய சூழல் உருவாக்கியுள்ளது. காரணம் வீட்டுக் கடன் பொருட்களின் மீதான கடன் குழந்தைகளின் பள்ளி கடன் என அனைத்தையும் சுமக்க வேண்டிய காலகட்டமாக இது அமைந்திருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் வருகிற 2025 26 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் கல்வி கட்டணம் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருப்பது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ஹைடெக் மற்றும் ஐடி சிட்டியாக இருக்கக்கூடிய பெங்களூர் அதே அளவிற்கு பொருளாதாரத்திலும் உயர்ந்திருக்கிறது. வீட்டு வாடகை முதல் பொருட்களின் விலைவாசி வரை அனைத்துமே பெங்களூரில் உயர்வு பெற்றிருக்கக் கூடிய சூழலில் வருகிற கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணம் இந்த ஆண்டு பெற்றோர்களிடம் பெறப்படுவதாகவும் அதிலும் குறிப்பாக 30% வரை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு வசூலிக்கப்படும் கட்டணத்தை விட 30 சதவிகித கூடுதல் கட்டணம் என்பது பெற்றோர்களின் உடைய தலையில் பாரமாக அமைவதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1.2 லட்சமாக இருந்த கல்வி கட்டணம் 2.1 லட்சமாக உயர்ந்து இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கும் பொழுது, பள்ளிகளில் கரும்பலகைகள் மற்றும் டெஸ்க் போன்ற பொருட்கள் மட்டும் இல்லை என்றும் அவற்றோடு சேர்த்து நிறைய ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகிகள் ஊழியர்கள் என பலரும் வேலை செய்வதாகவும் இவர்களுக்கு வருடா வருடம் சம்பள உயர்வு கொடுக்கப்பட வேண்டும் என்பதால் கட்டண உயர்வு என்பது அவசியம் என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு தெரிவிக்கும் பொழுது கூட 30 சதவிகித கல்வி கட்டண உயர்வு ஏற்புடையதல்ல எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.