விரைவில் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல்! சட்டப்பேரவையில் வெளிவந்த தகவல்!

0
148
People can now watch it online too! Next update released by CM!
People can now watch it online too! Next update released by CM!

விரைவில் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல்! சட்டப்பேரவையில் வெளிவந்த தகவல்!

 தற்போது தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என சட்டப்பேரவை தாக்கலில் விளக்கக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.இன்று நடத்தப்பட்ட மானிய கோரிக்கை தாக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கையின் போது எப்பொழுது தேர்தல் நடத்தப்படும் என கேள்விகள் எழுப்பப்பட்டது.அதில் ஒன்பது மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மருவரையறை செய்ய வேண்டியிருந்ததால் தேர்தல் நடக்காமல் இருந்தது.

தற்பொழுது காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி ,வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,திருநெல்வேலி தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்டதால் அங்கு உள்ள வார்டு புதிதாக ஏற்பாடு செய்ய வேண்டிய  அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்தது.ஒன்பது மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15 க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதனால் செப்டம்பர் 15 க்குள் இந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும்.

மேலும் அந்த பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல இந்த தேர்தல் நடந்து முடிந்த பிறகு நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும். இந்த மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதால் இவர்களுக்கென்று தனியாக தேர்தல் நடத்த மாட்டாது என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இன்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதிருமணம் ஆன நபருடன் கள்ள காதல்! பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! போலீசார் செய்த செயல்!
Next articleஇந்தியன் 2 திரைப்படம் குறித்து வெளியான தகவல்! நடிகர் கமல்ஹாசன் என்ன சொல்கிறார்?