திருமணம் ஆன நபருடன் கள்ள காதல்! பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! போலீசார் செய்த செயல்!

0
272
False love with a married person! Cruelty to the woman! The action taken by the police!
False love with a married person! Cruelty to the woman! The action taken by the police!

திருமணம் ஆன நபருடன் கள்ள காதல்! பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! போலீசார் செய்த செயல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தூம்கா மாவட்டத்தில், உள்ள ஒரு கிராமத்தில், திருமணமான இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட  கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் செல்ல வைத்துள்ளனர். அந்த பெண்ணும் திருமணம் ஆனவர். மேலும் ஒரு திருமணமான ஆணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டனர். ஆனாலும் ஊர்மக்கள் அவர்களை தேடி கண்டுபிடித்தனர்.

கடந்த புதன்கிழமை இரவு ஊர்மக்கள் கையில் பிடிபட்டனர். அதனை தொடர்ந்து கள்ளக்காதலனின் மனைவியின் குடும்பத்தினர், அந்தப் பெண்ணை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த பெண்ணை அதோடு விடாமல், அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி, கழுத்தில் செருப்பு மாலையையும் அணிவித்தனர். மேலும் அந்த பெண்ணை கிராமம் முழுவதும், அப்படியே நிர்வாணமாக, ஊர்வலம் அழைத்து சென்று உள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த பெண் போலீசிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த நபர்களில் கள்ளக்காதலன் மற்றும் அவரது மனைவி உட்பட ஆறு பேரை இதுவரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள ஆறு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கள்ள காதலனின்  குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து இருபத்தைந்தாயிரம் பணத்தையும் பறித்துக் கொண்டதாக அப்பெண் போலீசாரிடம் கூறியுள்ளார்.

Previous articleஇந்திய ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு வாழ்த்து! பிரபல கிரிக்கெட் வீரர் என்ன சொன்னார் தெரியுமா?
Next articleவிரைவில் வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல்! சட்டப்பேரவையில் வெளிவந்த தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here