ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய இனி கட்டணம் வசூலிக்கப்படும் – UIDAI அறிவிப்பு..!!

Photo of author

By Divya

ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய இனி கட்டணம் வசூலிக்கப்படும் – UIDAI அறிவிப்பு..!!

இந்தியாவில் ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாக உள்ளது.வங்கி கணக்கு,பான் கார்டு,அரசு மானியங்கள் என்று அனைத்து துறைகளிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இந்திய குடிமகன்கள் அனைவரிடமும் ஆதார் இருத்தல் அவசியமாகும்.

இந்நிலையில் பெயர்,புகைப்படம்,பிறந்த தேதி,முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதாரில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மே 01 ஆம் தேதியில் இருந்து அதற்கான கட்டணத் தொகையை செலுத்த வேண்டும் என்று UIDAI தெரிவித்து இருக்கிறது.

ஆதார் அனைத்து இடங்களிலும் கட்டாயம் தேவைப்படும் ஆவணமாக உள்ளதால் அதில் இருக்கின்ற விவரங்களில் பிழை இல்லாமல் இருப்பது முக்கியம்.அதுமட்டும் இன்றி முகவரி,மொபைல் எண் போன்ற விவரங்கள் சரியாக இருத்தல் வேண்டும்.

பயனர்கள் ஆதார் அட்டையில் தங்களில் பெயர்,பிறந்த தேதி,மொபைல் எண்,விரல் ரேகை பதிவு,கண் கருவிழி பதிவு,முகவரி,போட்டோ,தங்களின் பாலினம் போன்றவற்றை அப்டேட் செய்து கொள்ள முடியும்.

புதிய ஆதார் அட்டை பெற மற்றும் அதில் மாற்றம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:-

*ரேசன் கார்டு
*ஓட்டர் ஐடி
*பாஸ்போர்ட்
*ஓட்டுநர் உரிமம்
*கல்வி சான்றிதழ்

ஆதார்: எதற்கெல்லாம் இனி கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது?

1)புதிய பயனர்கள் கட்டணமின்றி ஆதார் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.

2)ஐந்து வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்கான புதிய பால் ஆதார் கார்டு பெற்றுக் கொள்ள மற்றும் விவரங்களை அப்டேட் செய்ய கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

3)ஐந்து முதல் பதினைந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு புதிய ஆதார் கார்டு பெற மற்றும் அதில் இருக்கின்ற விவரங்களை மாற்றம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

ஆதார்: எதற்கெல்லாம் இனி கட்டணம் வசூலிக்கப்படும்?

15 வயதை கடந்த அனைத்து பயனர்களுக்கும் ஆதார் அட்டையில் மாற்றம் செய்வதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

1)ஆதார் அட்டையில் பெயர்,பிறந்த தேதி,முகவரி,தொலைபேசி எண்,பாலினம் ஆகியவற்றில் மாற்றம் செய்ய ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

2)ஆதாரில் உங்கள் கை ரேகை மற்றும் கண் கருவிழி பதிவை அப்டேட் செய்ய ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

3)அப்டேட் செய்யப்பட்ட புதிய ஆதார் அட்டை வாங்க ரூ.30 கட்டணம் செலுத்த வேண்டும்.