போதைக்கு அடிமையான நடிகை சில்க் ஸ்மிதா.. சாவுக்கு அந்த நபர் தான் காரணம்.. பகீர் கிளப்பும் பிரபலம்..!!

Photo of author

By Vijay

போதைக்கு அடிமையான நடிகை சில்க் ஸ்மிதா.. சாவுக்கு அந்த நபர் தான் காரணம்.. பகீர் கிளப்பும் பிரபலம்..!!

Vijay

Updating your details in Aadhaar Card will no longer be charged - UIDAI Notice..!!

போதைக்கு அடிமையான நடிகை சில்க் ஸ்மிதா.. சாவுக்கு அந்த நபர் தான் காரணம்.. பகீர் கிளப்பும் பிரபலம்..!!

நடிகை சில்க் ஸ்மிதாவை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் அவர் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக இடம்பிடித்துள்ளார். பெரிதாக படிப்பறிவு இல்லாமல், சினிமா குறித்து எதுவுமே தெரியாமல் வண்டிச்சக்கரம் என்ற படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா.

அதனை தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் டாப் நடிகையாக கோலோச்சினார். சில்க்கின் கண்கள் கூட அவ்வளவு பிரமாதமாக நடிக்கும். அந்த அளவிற்கு திறமையான சில்க்கின் கால்ஷீட் கிடைக்காதா என்று ஏங்கிய டாப் ஹீரோக்களும் உள்ளனர். உதாரணமாக ஒரு சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது சில்க் மலையாள நடிகர் மோகன் லாலுடன் ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும்.

ஆனால் அந்த சமயத்தில் சில்க்கால் கேரளா செல்ல முடியாததால் மோகன் லால் சென்னைக்கு வந்து ஆடி சென்றார். இதுபோன்ற சரித்திர நிகழ்வுகளை எல்லாம் சில்க்கால் மட்டுமே நடத்த முடியும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு நடிகை மர்மமாக இறந்தது தான் இப்போது வரை புரியாத புதிராகவே உள்ளது. இந்நிலையில் இவர் மரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் சில அதிர்ச்சியான தகவல்களை கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது, “சினிமாவில் நன்றாக சம்பாதித்த சில்க் ஒருகட்டத்தில் 3 படங்களை தயாரித்தார். அந்த 3 படங்களுமே தோல்வி அடைந்ததால், போதைக்கு அடிமையாகி விட்டார். அவருக்கு போதை மருந்து கொடுப்பதற்காகவே ஒரு மருத்துவர் இருந்தார். அந்த மருத்துவரின் 23 வயது மகனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டுமென ஆசை. அதை சில்க்கிடம் கூற சில்க்கும் அவரின் பட தயாரிப்பாளர்களை அந்த பையனை அறிமுகம் செய்து வைத்தார்.

அதேபோல தன்னுடன் அனைத்து ஷூட்டிங்கிற்கும் அழைத்து சென்றார். இதனால் அவர்கள் இருவரையும் அந்த மருத்துவர் சந்தேகப்பட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இதனை அறிந்து மன உளைச்சலுக்கு ஆளான சில்க் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் சாவுக்கு அந்த மருத்துவர் தான் காரணம் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை” என கூறியுள்ளார்.