செக்ஸ் பொம்மைகளை அனுப்பி, ஆபாச தளத்தில் பெண்ணின் தொலைபேசி எண்ணை பதிவிட்ட இளைஞன்!

0
274

 

தனது காதலை ஒப்புக் கொள்ள மறுத்ததால் 26 வயது இளைஞன் ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டது மட்டுமில்லாமல் அந்த பெண்ணிற்கு செக்சு பொம்மைகளை அனுப்பிய இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண் தனது காதலை நிராகரித்ததால் அந்த இளைஞன் அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டது குறித்து மலாட் போலீசார் கடந்த வாரம் அந்த இளைஞரை கைது செய்தனர்.

காவல்துறையினரின் தகவலின் படி, கல்லூரி மாணவியான அந்தப் பெண், பிப்ரவரியில் பாலியல் உதவி கோரும் நபர்களிடமிருந்து தனக்கு அழைப்புகள் வருவதாகவும், அடையாளம் தெரியாத சிலர் தனது செக்சு பொம்மைகளை கொரியர் செய்வதாகவும் புகார் அளித்தார்.

விசாரணையின் போது, ஆபாச தளத்தில் பெண்ணின் தொலைபேசி எண்ணை பதிவு செய்த நபர் மற்றும் ஆன்லைனில் செக்ஸ் பொம்மைகளை ஆர்டர் செய்ய பயன்படுத்தப்பட்ட ஐபி முகவரிகளை போலீசார் கண்காணித்து அதை செய்தவர் யார் என கண்டுபிடித்தனர்.

மேலும், தகவல் தொழில்நுட்பம் (ஐடி) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது, என்று கூறப்படுகிறது.

Previous articleதலீபான்களால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்! வெளியான அதிர்ச்சி புகைப்படம்!
Next articleஅடுத்தடுத்து வரும் பண்டிகைகள்! கடுமையான எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!