அப்செட்டான அதிமுக நிர்வாகிகள்.. எடப்பாடி ஸ்டாலின் போல இல்லை!! இதெல்லாம் மாற்றியே ஆக வேண்டும்!!

Photo of author

By Rupa

அப்செட்டான அதிமுக நிர்வாகிகள்.. எடப்பாடி ஸ்டாலின் போல இல்லை!! இதெல்லாம் மாற்றியே ஆக வேண்டும்!!

2026 ஆம் ஆண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் திமுக மும்மரம் காட்டி வருகிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் தற்போதையிலிருந்து ஒருங்கிணைந்த குழு அமைத்து சட்டமன்ற தேர்தலுக்குரிய நடவடிக்கைகளை செய்து வருகிறது. இந்த ஒருங்கிணைப்பு குழு மூலம் அமைச்சர்கள் அனைவரும் தங்களது கூட்டணி கட்சியின் நிலைப்பாட்டை அறிந்து அதற்கு ஏற்ற அறிவுரையை தலைவருக்கு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மக்களவை தேர்தல் நடந்த பொழுதே இது ஆரம்பிக்கப்பட்டதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளார்களாம். முன்பை காட்டிலும் கள்ளக்குறிச்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் எடப்பாடி தீவிரம் காட்டி வந்தாலும் சில கட்டுப்பாடுகளில் காராராக உள்ளாராம். குறிப்பாக ஓபிஎஸ் சசிகலா தினகரன் இணைப்பு ஒருபோதும் வேண்டாம் என்ற பாணியில் இருப்பதால் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது கடினம் என கூறுகின்றனர்.

அதேபோல மக்களவைத் தேர்தலில் ஏன் தோற்று விட்டோம் என்ற கூட்டம் தான் மீண்டும் மீண்டும் நடக்கிறதே தவிர்த்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் எப்படி எதிர்கொள்வோம் என்ற திட்டங்கள் எதுவும் கையில் இல்லை. அதேபோல அதிமுகவின் மாஜி அமைச்சர்களும் தங்களது தொகுதியில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதில் தான் மும்மரம் காட்டி வருகின்றனர்.

மற்ற தொகுதிகளில் எந்த ஒரு ஈடுபாடும் காட்டுவதில்லை. இது அனைத்தும் கட்சியைப் பின்னோக்கி செல்ல வைக்கிறது. ஆனால் அதிமுகவின் சில அமைச்சர்கள் ஓபிஎஸ் மற்றும் சசிகலா கூட்டணி வேண்டும் என்ற கோரிக்கையை வழுத்து வருகின்றனர். தற்போதையிலிருந்து கூட்டணி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிர்வாகிகளின் மனநிலையானது உள்ளது. இதனை தவிர்க்க எடப்பாடி சட்டமன்ற தேர்தலை எதிர்க்கும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டுமென கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.