தினமும் இரவு தூக்கத்திற்கு நடுவே அவசரமாக சிறுநீர் வருகிறதா? ஜாக்கிரதை.. இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

Photo of author

By Divya

நம் உடலில் மிக முக்கியமான உள்ளுறுப்பாக திகழும் சிறுநீரகம் கழிவுகளை திரவமாக வெளியேற்றும் வேலைகளை செய்கிறது.தினமும் 7 முதல் 8 முறை சிறுநீரை வெளியேறினால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பழக்கம் இருக்கும்.அதிகளவு தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்.சிலருக்கு தண்ணீர் குடிக்காமலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.இரவில் அசந்து தூங்கும் நேரத்தில் தான் சிறுநீர் கழிக்க தோன்றும்.

சிறுநீரகப் பாதையில் தொற்று இருந்தால் இதுபோன்று பிரச்சனை ஏற்படும்.பாலியல் சம்மந்தபட்ட பாதிப்புகளை சந்தித்து வருபவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.

நீரிழிவு நோய் பாதிப்பால் அவதியடைந்து வருபவர்களுக்கு இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் நிலை ஏற்படும்.அதேபோல் இரத்த கொதிப்பு,கல்லீரல் சம்மந்தபட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்களுக்கு இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க தோன்றும்.

சிறுநீர்ப்பை நிரம்பி வயிறு வீக்கம் ஏற்படத் தொடங்குவதால் தூக்க கலக்கத்தில் கழிவறை நோக்கி வேகமாக ஓடி சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை பலரும் கொண்டிருக்கின்றனர்.முன்பெல்லாம் 40,45 வயதை தாண்டியவர்களுக்கு தான் இந்த பிரச்சனை இருந்ததது.

ஆனால் தற்பொழுது இளம் வயது நபர்களுக்கே இந்த பாதிப்பு சாதாரணமாக ஏற்படுகிறது.தண்ணீர் அருந்தாமை,சிறுநீர் அடக்கி வைத்தல்,பாலியல் தொற்று,நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் சிறுநீரக பாதையில் கிருமிகள் உருவாகிவிடுகிறது.

இதனால் சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,அடிக்கடி சிறுநீர் கழித்தல்,சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுதல்,அவசரமாக சிறுநீர் வெளியேறுதல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.சிலர் தூக்க கலக்கத்தில் அவரசமாக சிறுநீர் கழிப்பார்கள்.இதனால் கால் பகுதியில் இரத்தம் தேக்கமடைந்து செல்வதில் தடை ஏற்படுகிறது.

இதனால் இதயம்,மூளை உள்ளிட்ட உறுப்புக்கள் பாதிப்பை சந்திக்கிறது.எனவே உங்களுக்கு இரவில் சிறுநீர் கழிக்க தோன்றினால் முதலில் சில நொடிகள் எழுந்து அமர்ந்த பிறகு சிறுநீர் கழியுங்கள்.