Uric Acid: உடலில் உள்ள யூரிக் அமிலத்தை அசால்டாக குறைக்க என்னென்ன செய்யலாம்!!

Photo of author

By Divya

Uric Acid: உடலில் உள்ள யூரிக் அமிலத்தை அசால்டாக குறைக்க என்னென்ன செய்யலாம்!!

இன்று பெரும்பாலானோர் உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.இதனால் மூட்டு வலி,சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

யூரிக் அமிலம் அதிகரிக்க காரணம்:-

உடல் எடை அதிகரிப்பு,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,நீரிழிவு நோய்,மது பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது.

இந்த யூரிக் அமிலத்தை வீட்டு வைத்தியம் மூலம் குறைப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*வெற்றிலை

செய்முறை:-

ஒரு வெற்றிலை எடுத்து அதன் காம்பை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.இந்த வெற்றிலையை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கி கொள்ளவும்.

இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் யூரிக் அமிலத்தின் அளவு குறையும்.

தேவையான பொருட்கள்:-

*பாகற்காய்

செய்முறை:-

ஒரு முழு பாகற்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் யூரிக் அமிலத்தின் அளவு குறையும்.

தேவையான பொருட்கள்:-

*கறிவேப்பிலை

செய்முறை:-

ஒரு கப் கறிவேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இந்த சாற்றை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு முழுமையாக கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

*புதினா

செய்முறை:

ஒரு கிளாஸ் அளவு தண்ணீரில் 5 புதினா இலைகளை போட்டு கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு முழுமையாக கட்டுப்படும்.