Urine Infection: சிறுநீர்ப்பாதை தொற்று குணமாக.. சாதம் வடித்த கஞ்சி போதும்!
இன்றைய உலகில் சிறுநீர்ப்பாதை தொற்றால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.மோசமான உணவுமுறை பழக்கம் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.உடலிற்கு போதிய நீர் அருந்தாமை,சிறுநீரை அடக்கி வைத்தல்,அவசரமாக சிறுநீர் கழித்தல் போன்றவை சிறுநீர் தொற்றுக்கு காரணங்களாக உள்ளது.
உடலில் இருக்கின்ற நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் வேலைகளை செய்யும் உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம்.இதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நம் கடமையாகும்.ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளால் அவதியடையும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சிறுநீரக பாதை தொற்று அறிகுறிகள்:
1)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
2)உடல் சோர்வு
3)சிறுநீர் நிறம் மாற்றம்
4)சிறுநீர் பாதையில் இரத்தம் வெளியேறுதல்
5)சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல் உணர்வு உண்டாதல்
சிறுநீர்ப்பாதை தொற்றிற்கு சிறந்த வீட்டு வைத்தியங்கள்:
தீர்வு 01:
*தண்ணீர்
*எலுமிச்சை சாறு
ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஒரு கிளாஸ் அளவு நீரில் பிழிந்து குடித்து வந்தால் சிறுநீரக தொற்று குணமாகும்.எலுமிச்சையில் இருக்கின்ற தாதுக்கள்,வைட்டமின்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சிறுநீரக பாதையில் உள்ள தொற்றை குணமாக்க உதவுகிறது.
தீர்வு 02:
*சாதம் வடித்த கஞ்சி
ஒரு கப் சாதம் வடித்த கஞ்சியை ஆறவிட்டு பருகி வந்தால் சிறுநீரகத் தொற்று பாதிப்புகள் குணமாகும்.
தீர்வு 03:
*பெரிய நெல்லிக்காய்
*தண்ணீர்
ஒரு பெரிய நெல்லிக்காயை விதை நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த சாற்றை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீர்ப்பாதை தொற்று முழுமையாக குணமாகும்.