ஐஸ் பக்கெட் சேலஞ்ச்-ஐ அறிமுகம் செய்தவருக்கு நேர்ந்த சோகம்!
கடந்த 2014ஆம் ஆண்டு இணையதளத்தில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற சேலஞ்ச் பயங்கர வைரலானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவிலும் ஏன் தமிழகத்திலும் கூட இந்த சேலஞ்சை பிரபலங்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் எடுத்து அதன் வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டனர் ஒரு பக்கெட் நிறைய ஐஸ் கட்டியை வைத்து அந்த ஐஸ் கட்டியை தலையில் போட்டு குளிப்பது போன்ற வீடியோவை வெளியிட வேண்டும் என்பதே இந்த சேலஞ்சின் நோக்கம்
அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்பால் விளையாட்டு வீரரான பீட் ஃப்ரேட்ஸ் என்பவர் நரம்பு சார்ந்த ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நோய் குறித்த விழிப்புணர்ச்சிக்காகவே ஐஸ் பக்கெட் சேலஞ்சை அறிமுகம் செய்தார்.
நரம்பு சார்ந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கொண்டு ஐஸ் பக்கெட் சேலஞ்சை அறிமுகம் செய்த பீட் ஃப்ரேட்ஸ் என்ற அமெரிக்கர் தற்போது மரணம் அடைந்தார். அவருக்கு வயது 34.
சர்வதேச பிரபலங்கள் முதல் உள்ளூர் வரையில் பலரும் இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்து சமூக வலைதளப் பக்கங்களில் பிரபலப்படுத்தி இந்த நோய் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ததால் ALS என்னும் அந்த நரம்பு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி கிடைக்க வழிவகை செய்த பீட் ஃப்ரேட்ஸ் அதே நோயால் இன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது