போர் நிலவரம் குறித்து அறிய போலாந்து செல்லும் அமெரிக்க அதிபர்! உக்ரைன் செல்லும் திட்டம் இல்லை!!

Photo of author

By Parthipan K

போர் நிலவரம் குறித்து அறிய போலாந்து செல்லும் அமெரிக்க அதிபர்! உக்ரைன் செல்லும் திட்டம் இல்லை!!

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் மூன்று வாரங்களை கடந்தும் இன்று 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகளில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த ரஷிய படைகள், தற்போது பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள் என தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷியா அதனை கேட்காமல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. தனது தீவிர தாக்குதலால் ரஷியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ், கார்கீவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் இந்த தீவிர தாக்குதலால் அச்சமடைந்த உக்ரைன் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை சுமார் 34 லட்சம் பேர் வரை உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும், உக்ரைனின் அண்டை நாடான போலாந்து நாட்டில் பல லட்சக்கணக்கான உக்ரைனிய மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகிற வெள்ளிக்கிழமை போலாந்து நாட்டிற்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

அப்போது போலாந்து நாட்டின் அதிபர் ஆண்ட்ரிஸ் டூடாவை நேரில் சந்தித்து போர் நிலவரம் குறித்து ஜோ பைடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதே சமயம் ஜோ பைடன் உக்ரைனுக்கு செல்லும் திட்டம் இல்லை என அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.