அமெரிக்கா ஓபன் டென்னிஸ் : ஜப்பானை சேர்ந்த வீராங்கனை சாம்பியன் பட்டம்

Photo of author

By Parthipan K

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந்  தேதி தொடங்கிய அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நீயுயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி போட்டியில் நவாமி ஒசாகாவும், அஸ்ரென்காவும் வென்றனர்.  பின்னர் இருவரும் நேற்று நடந்த இறுதிபோட்டியில் மோதினர். நவாமி ஒசாகா ஜப்பானை சேர்ந்தவர் மற்றும் அஸ்ரென்கா பெலாரசை சேர்ந்தவரும் ஆவார்.
இருவரும் ஆடிய முதல் செட்டில்  அஸ்ரென்கா 6-1 என  எளிமையாக கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நவோமி ஒசாகா 6-3 என இரண்டாவது செட்டை கைப்பற்றினார். இறுதி செட்டில்தான் யார் வெற்றி பெறுவார் என அனைவருக்கும் தெரியும் மேலும் இறுதி செட்டிலும் நவோமி ஒசாகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டம் வென்றார்.