திடீரென இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போரை நிறுத்திய USA!! இரு படைகளுக்கும் வந்த முக்கிய விதிமுறைகள்!!

0
103
usa-stopped-the-israel-hezbollah-war
usa-stopped-the-israel-hezbollah-war

israel: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போரை நிறுத்தம் ஒப்பந்தம் மற்றும் சில விதிகளையும் விதித்துள்ளது அமெரிக்கா.

இந்த போர் தொடக்கத்தில் இஸ்ரேல் காசா மீதான போரில்  ஹிஸ்புல்லா அமைப்பு காசாவுக்கு ஆதரவாக களமிறங்கியது. இந்த ஆதரவுக்கு காரணமாக லெபனான் மீது இஸ்ரேல் அமைப்பு தாக்குதலை அறிவித்தது. இந்த தாக்குதல் தற்போது வரை மோசமான நிலைக்கு முன்னேறி வரும் நிலையில் தற்போது இந்த போர் நிறுத்தப்படுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த போர் கை மீறி செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த போரின் தொடக்கமானது கடந்த ஆண்டு பாலஸ்தீனம் ஆக்கிரமிப்பு போது ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் ஹமாஸ் அமைப்புக்கு  ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது.

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனம் மக்களை போரில் பல ஆயிரக்கணக்கான மக்களை சூறையாடியது இதில் மொத்தம் 45,000 கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானிலிருந்து இஸ்ரேல் அமைப்புகளை தாக்கி அழித்தது. மேலும் இந்த போர் மிகவும் மோசமான நிலையை எட்டி வரும் நிலையில் தற்போது இந்த போரை நிறுத்த அமெரிக்கா முன் வந்துள்ளது.

போரை நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதில் இந்த போரின் ஒப்பந்தம் 60 நாட்கள் வரை அமல் படுத்தப்படும். அதுவரை இஸ்ரேல் படைகள் பின்வாங்கப்படும், ஹிஸ்புல்லா தங்கள் ராணுவத்தை விரிவாக்கும்.

லிட்டானி ஆற்றின் பகுதியில்  லெபனான் மற்றும் ஐ நா வின் அமைதிப்படை வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். இதை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீறினால் இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்த உரிமை உள்ளது என கூறப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஹிஸ்புல்லா எதிர்த்து வருகிறது.

Previous articleமூன்றாம் உலகப்போர் தொடங்கிடுச்சு!! அணு ஆயுதங்களால் பேரழிவில் உலக நாடுகள் வெளியான அதிர்ச்சி தகவல்!!
Next articleபாகிஸ்தானின் ராணுவத்துக்கு கை கொடுக்கும் துருக்கி: இந்தியாவின் பாதுகாப்புக்கு புதிய சவால்!!