யூரிக் அமிலத்தை குறைக்க ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

யூரிக் அமிலத்தை குறைக்க ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Divya

உடலில் யூரிக் ஆசிட் அளவு அதிகரித்தால் மூட்டு வலி,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.எனவே உடலில் யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைக்க இதை முயற்சி செய்யுங்கள்.

பார்லி அரிசி – ஒரு தேக்கரண்டி
முள்ளங்கி துண்டுகள் – இரண்டு தேக்கரண்டி
தண்ணீர் – இரண்டு கப்

கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி பார்லி அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

அதன் பிறகு பார்லி அரிசியை தண்ணீர் ஈர்த்துவிட்டு மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு சிறிதளவு முள்ளங்கி எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள முள்ளங்கி துண்டுகளை அதில் சேர்க்க வேண்டும்.

அதன் பிறகு ஊறவைத்த பார்லி அரிசியை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இரண்டு கப் தண்ணீர் சுண்டி ஒரு கப் அளவிற்கு வரும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானத்தை கிண்ணத்திற்கு வடிகட்டி பருக வேண்டும்.இப்படி செய்தால் உடலில் யூரிக் அமில அளவு குறையும்.

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)இஞ்சி – ஒரு துண்டு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
4)தேன் – ஒரு தேக்கரண்டி

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.அடுத்து இடித்த இஞ்சியில் இருந்து சாறு எடுத்து எலுமிச்சை சாறில் கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி மிக்ஸ் செய்து சாப்பிட்டால் யூரிக் அமில அளவு குறையும்.