பாலியல் ரீதியான பாதிப்புகளை சரி செய்ய அஸ்வகந்தா என்ற மூலிகையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த அஸ்வகந்தா செடியில் உள்ள காய் பார்ப்பதற்கு சுண்டைக்காய் போன்று இருக்கும்.இந்த அஸ்வகந்தா செடியில் உள்ள பூ,காய்,இலை,வேர் என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.
ஆண்,பெண்ணிற்கு ஏற்படும் மலட்டு தன்மையை போக்கி பாலியல் உணர்ச்சியை தூண்டும் வயகரா போன்று இது செயல்படுகிறது.அஸ்வகந்தா வேர் தமிழில் அமுக்கிரா கிழங்கு என்று அழைக்கப்படுகிறது.
அஸ்வகந்தா பொடியை சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம்,மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு நீங்கும்.சர்க்கரை நோயாளிகள் அஸ்வகந்தா பொடியை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
1)அஸ்வகந்தா பொடி ஒரு ஸ்பூன்
2)பசும் பால் ஒரு கிளாஸ்
3)பசு நெய் ஒரு ஸ்பூன்
அஸ்வகந்தா நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.50 கிராம் அளவிற்கு வாங்கி பொடித்துக் கொள்ளவும்.இல்லையென்றால் அஸ்வகந்தா பொடி 100 கிராம் வாங்கிக் கொள்ளவும்.
செய்முறை விளக்கம்:
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அஸ்வகந்தாவை போட்டு லேசாக வறுக்கவும்.பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கவும்.பிறகு இதை ஈரமில்லாத ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி ஒரு ஸ்பூன் பசு நெய் சேர்த்து கலக்கி குடித்தால் மலட்டு தன்மை நீங்கும்.