காலையில் எழுந்ததும் உடலில் தேங்கிய கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றிவிட வேண்டும்.ஆனால் மலம் கழிக்க கூட நேரமில்லாமல் காலில் சக்கரம் கட்டியது போல் சிலர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
சிலருக்கு செரிமானப் பிரச்சனை,உடல் நலப் பிரச்சனையால் கழிவுகள் மலக் குடலில் தேங்கி தீராத தொல்லைகளை கொடுக்கிறது.மலம் கழிக்காமல் இருந்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.
மலசிக்கல் வருவதற்கான காரணங்கள்:
1)உரிய நேரத்தில் மலம் கழிக்காமை
2)செரிமானப் பிரச்சனை
3)உடல் நலக் கோளாறு
4)ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்
5)தண்ணீர் அருந்தாமை
மலச்சிக்கல் அறிகுறிகள்:
*வயிறு வலி
*உலர்ந்த மலம் வெளியேறுதல்
*ஆசனவாய் வலி
*வயிறு உப்பசம்
*குமட்டல்
*வயிறு பிடிப்பு
மலச்சிக்கலை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியம்:
நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய வெற்றிலையை மருந்தாக பயன்படுத்தலாம்.வெற்றிலையில் இருக்கின்ற நார்ச்சத்து மலக் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.இந்த வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வெற்றிலை
2)தண்ணீர்
செய்முறை:-
ஒரு முழு வெற்றிலையை காம்பு நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் வெற்றிலையின் சாற்றை பிழிந்து கொள்ளவும்.அதன் பிறகு 50 மில்லி நீரை அதில் கலந்து காலை நேரத்தில் குடித்தால் இறுகிய மலக் கழிவுகள் இளகி வெளியேறும்.
அதேபோல் வாழைப்பழத்தில் விளக்கெண்ணெய் தடவி சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட மலமும் சில நிமிடங்களில் வெளியேறி வயிற்றை சுத்தமாக்கிவிடும்.கருப்பு உலர் திராட்சை ஊறவைத்த நீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.மருந்து,மாத்திரை இன்றி இயற்கை பொருட்களை பயன்படுத்தி மலச்சிக்கலை அகற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.