வெற்றிலை இப்படி பயன்படுத்துங்கள்.. தோல் அலர்ஜி பாதிப்பை வாழ்நாளில் பார்க்கமாட்டீங்க!!

Photo of author

By Divya

வெற்றிலை இப்படி பயன்படுத்துங்கள்.. தோல் அலர்ஜி பாதிப்பை வாழ்நாளில் பார்க்கமாட்டீங்க!!

Divya

தோல் சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாக வெற்றிலை,துளசி இலை,சிறியாநங்கை போன்றவற்றை மருந்தாக பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

வெற்றிலை – ஒன்று
சிறியாநங்கை அல்லது வேப்பிலை – பத்து
மிளகு – ஐந்து
ஏல அரிசி – கால் தேக்கரண்டி
துளசி இலை – பத்து

செய்முறை விளக்கம்:-

முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் வெற்றிலையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் பத்து வேப்பிலை அல்லது சிறியாநங்கை இலையை போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் ஐந்து கருப்பு மிளகை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்து ஏலக்காய் விதை கால் தேக்கரண்டி அளவு சேகரித்து அதில் வைக்க வேண்டும்.அடுத்து பத்து துளசி இலைகளை அதில் வைத்து மடக்கி காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டும்.இப்படி தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் தோல் அரிப்பு,தோல் தடிப்பு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

வெற்றிலை – ஒன்று
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
வேப்பிலை – பத்து
ஏல அரிசி – கால் தேக்கரண்டி
துளசி இலை – பத்து

செய்முறை விளக்கம்:-

வெற்றிலை,துளசி மற்றும் வேப்பிலையை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீரவிட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனுடன் கால் தேக்கரண்டி ஏல அரிசியை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை சருமம் முழுவதும் அப்ளை செய்து குளித்தால் தோல் தடிப்பு,தோல் அலர்ஜி பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

வேப்பிலை – கால் கைப்பிடி
மஞ்சள் கிழங்கு – ஒரு துண்டு

செய்முறை விளக்கம்:-

முதலில் கால் கைப்பிடி வேப்பிலையை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகுஒரு துண்டு மஞ்சள் கிழங்கை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.

இந்த பேஸ்டை சருமத்தில் பூசி சிறிது நேரம் ஊறவைத்து குளித்தால் தோல் தடிப்பு,தோல் எரிச்சல் பாதிப்பு குணமாகும்.