இடுப்பு வலி குறைய.. எலும்பு எக்கு போன்று வலிமை பெற கருப்பு உளுந்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

இடுப்பு வலி குறைய.. எலும்பு எக்கு போன்று வலிமை பெற கருப்பு உளுந்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

Divya

கருப்பு உளுந்தில் கால்சியம்,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,பொட்டாசியம்,இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.இந்த கருப்பு உளுந்தில் செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி,எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

இடுப்பு வலிமைக்கு கருப்பு உளுந்து புட்டு:

தேவைப்படும் பொருட்கள்:-

1)உடைத்த கருப்பு உளுந்து – ஒரு கப்
2)பச்சரிசி – அரை கப்
3)ஏலக்காய் – ஒன்று
4)தேங்காய் துருவல் – அரை கப்
5)நாட்டு சர்க்கரை – அரை கப்
6)உப்பு – சிறிதளவு
7)தண்ணீர் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு கப் உடைத்த உளுந்தை வாணலியில் சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பிறகு இதை பாத்திரத்தில் கொட்டி ஆறவைக்க வேண்டும்.

2.அடுத்து அரை கப் அளவிற்கு பச்சரிசி எடுத்து வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இப்பொழுது உளுந்து மற்றும் அரிசியை நன்கு ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

3.அதன் பிறகு ஒரு ஏலக்காயை அதனுடன் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் கொட்ட வேண்டும்.

4.அதன் பிறகு அரை கப் நாட்டு சர்க்கரை மற்றும் உப்பு தூவி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து சிறிது தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்திற்கு கலந்துவிட வேண்டும்.

5.பிறகு அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு இட்லி தட்டில் ஈரமான காட்டன் துணி வைத்து தயாரித்து வைத்துள்ள புட்டு மாவை பரப்பி மூடி போட்டு வேகவைக்க வேண்டும்.

6.புட்டு வெந்து வந்ததும் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேங்காய் துருவலை இதனுடன் தூவி சாப்பிட வேண்டும்.இந்த கருப்பு உளுந்து புட்டு இடுப்பு எலும்பை வலிமையாக்கும்.இடுப்பு வலி,முதுகு வலி பாதிப்பு இருப்பவர்கள் வாரத்தில் மூன்று தினங்கள் கருப்பு உளுந்து புட்டு செய்து சாப்பிட்டு வந்தால் உரிய பலனை காண முடியும்.கருப்பு உளுந்து பால்,கருப்பு உளுந்து லட்டு,கருப்பு உளுந்து களி,கருப்பு உளுந்து கஞ்சி போன்றவற்றை செய்து சாப்பிட்டு வந்தாலும் இடுப்பு எழும்பு வலிமையாகும்.