கண்களை சுற்றி காணப்படும் கருமை மறைய பச்சை பாலை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Gayathri

ஆண்,பெண் அனைவருக்கும் கருவளையம் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது.இதனால் முகத்தின் அழகு முற்றிலும் பாதிக்கப்படுகிறது.முகம் பொலிவற்று காணத் தொடங்கிவிடும்.தூக்கமின்மை,சரும பராமரிப்பின்மை,அதிக நேரம் மின்னணு சாதனங்களை பார்த்தால் போன்ற காரணங்களால் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுகிறது.

இந்த கருவளையங்களை மறைக்க கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்தாமல் இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தின் மூலம் பலனை காணுங்கள்.

1)காய்ச்சாத பால் – இரண்டு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

கருவளையத்தை போக்கும் க்ரீம் தயாரிக்க காய்ச்சாத பசும் பால் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.இதை கண்களை சுற்றி அப்ளை செய்து நன்கு காயவிடுங்கள்.இப்படி செய்தால் கண்களை சுற்றி காணப்படும் கருவளையம் நீங்கிவிடும்.

1)பால் – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி

ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பசும் பால் ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்துக் கொள்ளுங்கள்.

இதை கண்களை சுற்றி அப்ளை செய்து கொள்ளுங்கள்.ஒரு மணி நேரம் கழித்து சுத்தமான நீரில் கண்களை சுற்றி கழுவுங்கள்.இப்படி தினமும் செய்து வந்தால் கண் கருவளையம் முழுமையாக நீங்கிவிடும்.

1)காய்ச்சாத பால் – ஒரு தேக்கரண்டி
2)பாதாம் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

பாலை கிண்ணத்தில் ஊற்றி ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.இதை கருவளையத்தின் மீது அப்ளை செய்து வந்தால் சில தினங்களில் அவை மறைந்துவிடும்.