மலம் கழிக்கும் பொழுது ஏற்படும் எரிச்சலை சரிசெய்ய தேனை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

மலம் கழிக்கும் பொழுது ஏற்படும் எரிச்சலை சரிசெய்ய தேனை இப்படி யூஸ் பண்ணுங்க!!

உங்களில் சிலர் மலம் கழிக்கும் போது தீவிர எரிச்சலை அனுபவிப்பீர்கள்.மலம் கழிக்க முடியாமல் அதிக வலியை அனுபவிக்க நேரிடும்.ஆசனவாயில் பிளவு,காயங்கள் ஏற்பட்டால் இதுபோன்ற வலி ஏற்படும்.

நாள்பட்ட இறுகிய மலத்தை வெளியேற்றும் பொழுது ஆசனவாய் பகுதியில் பிளவு மற்றும் காயங்கள் உண்டாகிறது.எதனால் ஒவ்வொரு முறை மலம் கழிக்கும் பொழுதும் வலி,எரிச்சலை சந்திக்க நேரிடுகிறது.

ஆசனவாய் பிளவால் சிறு வயதினர் அதிகம் பாதிக்கின்றனர்.இந்த பாதிப்பால் சில சமயம் ஆசனவாய் பகுதியில் இரத்த போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.இதனால் இந்த பாதிப்பை மூல நோய் என்று பெரும்பாலானோர் தவறாக புரிந்து கொள்கின்றனர்.ஒருவருக்கு ஆசனவாய் பகுதியில் பிளவு ஏற்பட்டால் அதிகபட்சம் 3 முதல் 4 வாரங்களில் சரியாகிவிடும்.ஒருவேளை வாரங்கள் கடந்தும் ஆசனவாய் பகுதியில் உள்ள பிளவு ஆறவில்லை என்றால் அதற்கான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

ஆசனவாய் பிளவு அறிகுறிகள்:-

1)மலம் வெளியேறும் பகுதியில் பிளவு

2)ஆசனவாய் பகுதியில் கட்டி

3)மலக் குடலில் வலி

4)மலம் வெளியேறியப் பின் இரத்தக் கசிவு

5)ஆசனவாய் பகுதியில் எரிச்சல்,அரிப்பு உண்டாதல்

ஆசனவாய் பிளவால் ஏற்படும் நோய் பாதிப்புகள்:-

*ஆசனவாய் புற்றுநோய்

*HIV

*காசநோய்

ஆசனவாய் பிளவுகள் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது.ஆசனவாய் பகுதியில் உள்ள திசுக்கள் சேதமடைவதால் மலம் கழிக்கும் பொழுது அதிகப்படியான வலி மற்றும் எரிச்சல் உண்டாகிறது.

ஆசனவாய் பிளவு குணமாக எளிய வழிகள்:-

1)தேங்காய் எண்ணெய்

ஆசனவாய் பகுதியை சுற்றி தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து வந்தால் அவை சில தினங்களில் சரியாகிவிடும்.

1)ஆலிவ் ஆயில்
2)தேன்

ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயிலில் சிறிது தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.பிறகு இதை ஆசனவாய் பகுதியில் அப்ளை செய்து வந்தால் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.