நாம் தவிர்த்து வரும் ஊட்டச்சத்து நிறைந்த காய்களில் ஒன்று கோவக்காய்.இது கொடி வகையை சேர்ந்த காய்கறியாகும்.கோவக்காயில் பொட்டாசியம்,கால்சியம்,மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது.
தினமும் கோவக்காய் வேக வைத்த நீர் பருகி வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
1)கோவக்காய் – ஐந்து
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:
முதலில் ஐந்து கோவக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்.இதை தண்ணீரில் போட்டு அலசி சுத்தப்படுத்துங்கள்.
பிறகு கோவக்காயை வட்ட வடிவில் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போடுங்கள்.அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.
ஒரு கப் கோவக்காய் நீர் அரை கப் அளவிற்கு வரும் வரை சுண்டக் காய்ச்சுங்கள்.பிறகு இதை லேசாக ஆறவிட்டு ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி காலை உணவு,மதிய மற்றும் மாலை உணவிற்கு பின்னர் பருக வேண்டும்.
இந்த கோவக்காய் நீரை தினமும் பருகி வந்தால் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க,சர்க்கரை நோய் குணமாக கோவைக்காய் நீர் பருகலாம்.
கோவக்காய் வேகவைத்த நீரை பருகி வந்தால் உடலில் கால்சியம்,இரும்பு போன்ற ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும்.கோவக்காயை பச்சையாக சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.சிறுநீர கற்கள்,சிறுநீரக தொற்று உள்ளவர்கள் கோவக்காய் வேக வைத்த நீரை பருகலாம்.உடல் சோர்வு நீங்க கோவக்காய் நீர் பெரிதும் உதவுகிறது.எனவே தினமும் ஒரு கிளாஸ் கோவக்காய் நீர் செய்து பருகுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.