எலுமிச்சை பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க.. நிற்காமல் போகும் பேதி உடனே சரியாகும்!!

எலுமிச்சை பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க.. நிற்காமல் போகும் பேதி உடனே சரியாகும்!!

உங்களில் பலர் வாழ்நாளில் ஒருமுறையாவது வயிற்றுப்போக்கு பாதிப்பால் அவஸ்தை அடைந்திருப்பீர்கள்.இதற்கு முக்கிய காரணம் நாம் எடுத்துக் கொள்ள கூடிய உணவுகள்.எளிதில் செரிமானமாகாத உணவு,நம் உடலுக்கு ஒப்புக்கொள்ளாத உணவு போன்ற காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

அது மட்டுமின்றி உடல் சூடு,வயிறு எரிச்சல் போன்ற காரணங்களாலும் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பாதிப்பிற்கு இயற்கை வழியில் தீர்வு காண்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)ஏலக்காய் – ஒன்று
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சையின் சாற்றை ஒரு கிண்ணத்தில் பிழிந்து கொள்ளவும்.விதைகள் இருந்தால் நீக்கி விடவும்.

அதன் பின்னர் ஒரு ஏலக்காய் எடுத்து அதில் இருக்கும் விதைகளை பிரித்து எடுக்கவும்.இதை ஒரு உரலில் போட்டு இடிக்கவும்.

பிறகு இந்த ஏலக்காய் விதை பொடியை எலுமிச்சை சாறு கிண்ணத்தில் சேர்த்து கலக்கவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி தேன் எடுத்து அதில் சேர்த்து நன்கு கலக்கி சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பாதிப்பிற்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)தயிர்
2)வெந்தயத் தூள்

செய்முறை:-

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி தயிரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பாதிப்பிற்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

வயிற்றுப்போக்கு பாதிப்பால் அவதியடையும் நேரத்தில் சூடான உணவு,சூடான பானங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.இதுபோன்ற உணவுகளால் வயிற்றுப்போக்கு தீவிரமாகிவிடும்.