கல்லீரலில் சுரக்கும் பித்த நீரை வெளியேற்ற.. எலுமிச்சை சாற்றை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Rupa

கல்லீரலில் சுரக்கும் பித்த நீரை வெளியேற்ற.. எலுமிச்சை சாற்றை இப்படி பயன்படுத்துங்கள்!!

நமது உடலின் முக்கிய உள்ளுறுப்பான கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் சுரக்கின்றது.இந்த மஞ்சள் திரவத்தை பித்த நீர் என்று அழைக்கிறார்கள்.இந்த பித்த நீரானது உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.ஆனால் இந்த பித்த நீர் அதிகமாக சுரந்தால் அவை உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

பித்த நீர் அதிகமானால் என்ன நிகழும்?

1)அளவிற்கு மீறிய பசி மற்றும் தண்ணீர் தாகம் ஏற்படும்

2)முடி உதிரும்,வெள்ளைமுடி தோன்றும்

3)மயக்கம்

4)ஒற்றைத்தலைவலி

5)வாய் துர்நாற்றம்

6)உடல் துர்நாற்றம்

7)தூக்கமின்மை

8)தொண்டை வலி

புளிப்பு,உப்பு நிறைந்த உணவுகள்,அதிக காரம் நிறைந்த உணவுகள்,எண்ணெயில் வறுத்த உணவுகள் பித்த நீரை அதிகமாக்கும்.அதேபோல் பால் டீ,பிளாக் டீ அதிகளவு எடுத்துக் கொள்வது பித்தத்தை அதிகமாக்கும்.

பித்த நீர் அதிகமாவதால் ஏற்படும் பாதிப்புகள்:

*நெஞ்சு எரிச்சல்

*பக்க வாதம்

*சிறுநீரகத் தொற்று

*மஞ்சள் காமாலை

*வயிற்றுப்போக்கு

*உடல் சோர்வு

*மனச்சோர்வு

பித்தத்தை எப்படி குறைப்பது?

1.நெய்
2.தண்ணீர்

ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அருந்தினால் பித்தம் குறையும்.இந்த நீரை தினமும் அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

1.எலுமிச்சை
2.சீரகம்

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை வட்ட வடிவில் நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு ஸ்பூன் சீரகத்தை அதில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

1.மிளகு

பித்தத்தை கட்டுப்படுத்த மிளகு சிறந்த தீர்வாக இருக்கிறது.தினமும் 2 அல்லது 3 மிளகை மென்று சாப்பிட்டு வந்தால் பித்தம் குணமாகும்.

1.கொய்யா பழம்
2.தண்ணீர்

ஒரு கனிந்த கொய்யாவை பொடியாக நறுக்கி ஜூஸ் பதத்திற்கு அரைத்து பருகி வந்தால் பித்தம் கட்டுப்படும்.

1.எலுமிச்சை சாறு
2.தண்ணீர்

ஒரு கிளாஸ் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து பருகி வருவதன் மூலம் பித்தத்தை குறைக்கலாம்.