நன்னாரி வேரை இப்படி பயன்படுத்தினால் சிறுநீரக தொற்றுக்கு தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Divya

 

நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சிறுநீரகம் உதவுகிறது.ஆனால் சிறுநீரக பாதையில் பாக்டீரியாக்கள் நுழைந்தால் அவை தொற்றை உருவாக்கி கடுமையான தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும்.

 

இன்று உணவுப் பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டுவிட்டது.இதனால் சிறுநீரக தொற்று எளிதில் உருவாகி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்,வலி உணர்வை ஏற்படுத்துகிறது.

 

இந்த சிறுநீரகப் பாதை தொற்றை குணமாக்க பாதாள மூலி மூலிகையை பயன்படுத்தலாம்.இது நன்னாரி,அங்காரி மூலி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.இவை காடு,புதர்களில் செழிப்பாக வளரக் கூடிய மூலிகை ஆகும்.நன்னாரி இலையில் இருந்து எந்த ஒரு வாசனையும் வராது.ஆனால் நன்னாரி வேரில் நறுமணம் வீசும்.உடல் சூடு சிறுநீரக பிரச்சனை,பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது.

 

தேவையான பொருட்கள்:

 

1)பாதாள மூலி நன்னாரி வேர்

2)எலுமிச்சை சாறு

3)கருப்பட்டி

 

செய்முறை:

 

முதலில் பாதாள மூலி நன்னாரி வேரை நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.பிறகு அதில் சிறிதளவு கருப்பட்டி சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

 

அதன் பிறகு காயவைத்த பாதாள மூலி நன்னாரி வேரை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து எலுமிச்சை சாறில் போட்டு ஊறவிடவும்.

 

அடுத்து ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.இதை நன்னாரி வேர் ஊறவைத்துள்ள கிண்ணத்தில் ஊற்றி பருகினால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல்,சிறுநீரகப் பாதை தொற்று,வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.