கற்றாழையில் இருந்து கரிய போளம் எனும் மூலிகை கிடைக்கிறது.கற்றாழை செடியில் வெளியேறும் பிசின் தான் கரிய போளம்.இதில் பாக்டீரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது.
சோற்றுக்கற்றாழை மடலில் இருந்து வெளியேறும் மஞ்சள் நிற திரவத்தை சேகரித்து வெயிலில் நன்கு காயவைத்தால் கரிய போளம் கிடைக்கும்.இந்த கரிய போளம் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
வீக்கம்,சுளுக்கு போன்றவற்றை சரி செய்ய இந்த மூலிகை பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.இரத்தக்கட்டு உள்ளவர்கள் கரிய போளத்தை வைத்து தீர்வு காணலாம்.அதேபோல் மலச்சிக்கல் பிரச்சனைக்கு கரிய போளம் சிறந்த மருந்தாக திகழ்கிறது.
தேவையான பொருட்கள்:
1)கரிய போளம் – ஐந்து கிராம்
2)பனைவெல்லம் – ஐந்து கிராம்
செய்முறை விளக்கம்:
கரிய போளம் மற்றும் பனைவெல்லத்தை வைத்து மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் மருந்து ஒன்றை தயாரிப்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
5 கிராம் கரிய போளம் மற்றும் 5 கிராம் பனைவெல்லம் எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடாக்குங்கள்.அடுத்து அதில் 5 கிராம் கரிய போளம் மற்றும் 5 கிராம் பனைவெல்லத்தை போட்டு கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகுங்கள்.
இந்த பணத்தை காலை நேரத்தில் எடுத்துக் கொண்டால் மலச்சிக்கலுக்கு முழுமையான பலன் கிடைக்கும்.