பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க மிளகை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Rupa

பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க மிளகை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Rupa

Use pepper in this way to get a permanent solution to migraine headache!!

ஒற்றைத்தலை வலியை சித்த வைத்திய முறைப்படி சரி செய்வது எப்படி?

ஒற்றை தலைவலி பரம்பரையாக வரக்கூடிய ஒரு வியாதி என்று கூறலாம். ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் தினசரி தண்ணீர் ஆனது அதிக அளவு குடிக்க வேண்டும். அதேபோல 6 முதல் 7 மணி நேரம் தூக்கத்தை முறையாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றத்தினால் ஒற்றைத் தலைவலியானது உண்டாகும். அதேபோல ஒருவருக்கு மன அழுத்தம் பருவநிலை மாற்றம் போன்றவையும் இதற்கு முக்கிய காரணிகளாக வழிவகுக்கும். இதிலிருந்து வெளிவர முறையான உணவு பழக்க வழக்கம் கடைபிடிப்பது அவசியம். மேற்கொண்டு இதனை வீட்டு வைத்திய முறையிலும் சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
சுக்கு 5 கிராம்
அமுக்கிரா 5 கிராம்
திப்பிலி 5 கிராம்
சதாவரி 5 கிராம்
தாமரைப்பூ 5 கிராம்
மிளகு 5 கிராம்
அக்கிரா 5 கிராம்
சித்தரத்தை 10 கிராம்

செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனை நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் வைக்க வேண்டும்.
அது சூடு ஏறியதும் கழுத்து வைத்துள்ள பொடியை சேர்க்க வேண்டும்.
இதனுடன் பனைவெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இதனை காலை மாலை என இரு வேளையும் கசாயம் போல் சாப்பிட்டு வர ஒற்றைத் தலைவலி நிரந்தரமாக குணமாகும்.