அல்சர் மற்றும் வாய்ப்புண் நிரந்தர தீர்வுக்கு சின்ன வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!  

Photo of author

By Divya

அல்சர் மற்றும் வாய்ப்புண் நிரந்தர தீர்வுக்கு சின்ன வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

வயிறு சார்ந்த ஒரு பாதிப்பாக அல்சர் உள்ளது.உணவை தவிர்த்தல்,காரசாரமான உணவு எடுத்துக் கொள்ளுதல்,சூடான உணவுகள் உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் அல்சர்,வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதை இயற்கை வைத்தியங்கள் மூலம் எளிய முறையில் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)சின்ன வெங்காயம்
2)மணத்தக்காளி கீரை
3)சீரகம்
4)தூள் உப்பு

செய்முறை:-

ஒரு மணத்தக்காளி கீரையை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.அடுத்து 5 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.அதன் பின்னர் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காய துண்டுகளை சேர்க்கவும்.அதன் பின்னர் பொடியாக நறுக்கிய மணத்தக்காளி கீரையை கொட்டி கலந்து விடவும்.

அடுத்து 1/2 தேக்கரண்டி சீரகம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த மணத்தக்காளி கீரை கசாயத்தை குடித்து வருவதன் மூலம் அல்சர்,வாய்ப்புண் உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்து கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)கீழா நெல்லி பொடி
2)அதிமதுரப் பொடி
3)கடுக்காய் பொடி

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 5 கிராம் கீழாநெல்லி பொடி,5 கிராம் அதிமதுரப் பொடி மற்றும் 5 கிராம் கடுக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சில நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால் வாய்ப்புண்,அல்சர்,குடல் புண்,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும்.