தலையில் உள்ள பொடுகை அடியோடு நீக்க இந்த இரண்டு பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

தலையில் உள்ள பொடுகை அடியோடு நீக்க இந்த இரண்டு பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!!

Divya

Updated on:

use-these-two-products-to-get-rid-of-dandruff-completely

தலையில் உள்ள பொடுகை அடியோடு நீக்க இந்த இரண்டு பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!!

தலையில் பொடுகு இருந்தால் அதிகளவு முடி உதிரும்.அதுமட்டும் இன்றி தாங்க முடியாத அளவு அரிப்பு ஏற்படும்.

இந்த பொடுகு தொல்லையில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து தயிரில் கலந்து தலைக்கு தடவுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சின்ன வெங்காயம்
2)தயிர்
3)வெந்தயம்
4)வேப்பிலை

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி உரலில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஊற வைத்த வெந்தயம் மற்றும் 1/4 கைப்பிடி அளவு வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் 1/2 கப் தயிர் எடுத்து அதில் அரைத்த சின்ன வெங்காயம்,வெந்தயம் + வேப்பிலை விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.பின்னர் ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரில் தலையை அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

இவ்வாறு வாரம் மூன்று முறை தலைக்கு குளித்து வந்தால் தலையில் உள்ள பொடுகு அடியோடு நீங்கி விடும்.