அனைவருக்கும் இருக்க கூடிய பெரிய ஆசை வயதான பிறகும் முகம் சுருக்கம் இல்லாமல் இளமையுடன் இருக்க வேண்டும் என்பது தான்.ஆனால் யார் சருமத்தை முறையாக பராமரித்து வருகிறார்களோ அவர்களால் தான் என்றும் இளமை தோற்றத்துடன் இருக்க முடியும்.
1)அரிசி மாவு
2)கடலை மாவு
3)கற்றாழை ஜெல்
*ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு,ஒரு தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
*பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
*நன்கு க்ரீமி பதத்திற்கு வந்தததும் இதை ப்ரீஸரில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
*பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்து தயார் செய்து வைத்திருக்கும் க்ரீமை முகம் முழுவதும் அப்ளை செய்து மென்மையாக மசாஜ் செய்து அரை மணி நேரத்திற்கு உலர விடவும்.
*பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவவும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முக சுருக்கம் இல்லாமல் அழகாக இருக்கும்.
1)வைட்டமின் ஈ மாத்திரை
2)கற்றாழை ஜெல்
*கற்றாழை துண்டுகளில் இருந்து ஜெல்லை மட்டும் தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு க்ரீமி பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
*பிறகு ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை கற்றாழை ஜெல்லில் கலந்து முகம் முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் காணப்படும் சுருக்கம் அனைத்தும் நீங்கி என்றும் இளமையாக தெரிவீர்கள்.
1)முல்தானி மெட்டி பொடி
2)ரோஸ் வாட்டர்
3)கஸ்தூரி மஞ்சள் தூள்
*கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடி,ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒன்றரை தேக்கரண்டி ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்டாக்கி முகத்திற்கு அப்ளை செய்யவும்.
*சிறிது நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி துடைத்துக் கொள்ளவும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் காணப்படும் சுருக்கம் நீங்கி என்றும் இளமை பொலிவுடன் இருக்க முடியும்.