இன்று பலர் உரிய நேரத்தில் உட்கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தை இழந்து வருகின்றனர்.தவறான உணவுப் பழக்கங்கள் வயிறு சம்மந்தப்பட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,அசிடிட்டி,வயிறு வலி,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.குறிப்பாக அஜீரணக் கோளாறால் அசிடிட்டி அதாவது நெஞ்செரிச்சல் உண்டாகிறது.
இதனால் தலைவலி,கடும் வயிற்றுவலிபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த அசிடிட்டியில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்கள் தங்களுக்கு உதவக்கூடும்.
1)புதினா
2)தண்ணீர்
3)தேன்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஐந்து புதினா இலைகளை போட்டு கொதிக்கவைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி குடித்தால் அசிடிட்டி மற்றும் வயிற்றுவலி குணமாகும்.
1)தயிர்
2)வெந்தயம்
ஒரு கப் தயிரை மிக்ஸி ஜாரில் ஊற்றி ஒரு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு சுத்துவிடவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து அரை தேக்கரண்டி வெந்தயம் லேசாக வறுத்து ஆறவிட்டு அரைத்து மோரில் கலந்து குடித்தால் அசிடிட்டி சரியாகும்.
1)எலுமிச்சை
2)இஞ்சி
3)தேன்
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.
இப்பொழுது அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்.பிறகு ஒரு கிளாஸிற்கு இந்த பானத்தை வடிகட்டி பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு சேர்த்து தேன் கலந்து குடித்தால் அசிடிட்டி சரியாகும்.
1)ஓமம்
2)தண்ணீர்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் அசிடிட்டி சரியாகும்.