ஆஸ்துமாவிலிருந்து நிரந்தரமாக விடுபட வீட்டிலிருக்கும் இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Rupa

நுரையீரலை பாதிக்க கூடிய தீவிர நோய்களில் ஒன்று ஆஸ்துமா.இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.மாசடைந்த காற்று,ஒவ்வாமை,பரம்பரைத் தன்மை போன்ற காரணங்களால் ஆஸ்துமா உண்டாகிறது.

வீட்டு வைத்தியம் 01:

1)வெந்தயம்
2)தேன்

ஒரு கப்பில் 10 கிராம் வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.மறுநாள் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா பாதிப்பு சரியாகும்.

வீட்டு வைத்தியம் 02:

1)எள்
2)தேன்

ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.பிறகு அதில் 1/2 தேக்கரண்டி கருப்பு எள் சேர்த்து கொதிக்க விடவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து குடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஆஸ்துமா பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

வீட்டு வைத்தியம் 03:

1)மிளகு
2)நெய்
3)மஞ்சள்

10 கருப்பு மிளகை லேசாக வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் மிளகுத் தூள்,சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் நெய் சேர்த்து குடித்தால் ஆஸ்துமாவிற்கு தீர்வு கிடைக்கும்.

வீட்டு வைத்தியம் 04:

1)இலவங்கப்பட்டை பொடி
2)தேன்

ஒரு துண்டு பட்டையை பொடியாக்கி சூடான நீரில் சேர்க்கவும்.பிறகு அதில் சிறிதளவு தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா பாதிப்பு நீங்கும்.

வீட்டு வைத்தியம் 05:

1)பூண்டு
2)பால்

இரண்டு பல் வெள்ளை பூண்டை தோல் நீக்கி தட்டி வைத்துக் கொள்ளவும்.பிறகு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு இடித்த பூண்டு பற்களை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் ஆஸ்துமா குணமாகும்.

வீட்டு வைத்தியம் 06:

1)வேப்பிலை

ஒரு கொத்து வேப்பிலையை தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இதை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும்.