கண் இமைகள் அடர்த்தியாக வளர.. இரவில் இந்த எண்ணெய் யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Rupa

அழகான வசீகரமான முகத்திற்கு கண் இமைகள் முக்கிய பங்காற்றுகிறது.ஒருவருக்கு கண் அழகாக இருக்க அவரது புருவம் கருமையாகவும்,அடர்த்தியாகவும் இருக்க வேண்டும்.அழகான அடர்த்தியான கண் புருவங்களை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள்.

தீர்வு 01:

ஆமணக்கு எண்ணெய்

இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னர் ஆமணக்கு எண்ணையை கண் இமைகளின் மீது பூசி வந்தால் சில வாரங்களின் இமைகள் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

ஆமணக்கு எண்ணெய் தலை மற்றும் புருவ முடிகளை நன்றாக வளர வைக்க உதவுகிறது.ஆமணக்கு எண்ணையில் கொழுப்பு அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இது கண் இமைகளை வலுவாக வளர வைக்கிறது.

தீர்வு 02:

வைட்டமின் ஈ

கண் இமைகளை அடர்த்தியாக வளர வைக்க வைட்டமின் ஈ எண்ணெயை இமைகளுக்கு பயன்படுத்தலாம்.

ஒரு காட்டன் பஞ்சில் வைட்டமின் ஈ எண்ணெயை ஊற்றி கண் இமைகள் மீது தடவிய பிறகு உறங்கும்.இவ்வாறு தினமும் வைட்டமின் ஈ எண்ணெய் பயன்படுத்தி வந்தால் வலுவான கண் இமைகள் வளரும்.

தீர்வு 03:

கற்றாழை ஜெல்

கண் இமைகள் அடர்ந்து வளர கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம்.பிரஸ் கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்து க்ரீமியாக்கி கொள்ளுங்கள்.இதை கண் இமைகளின் மீது தடவி வந்தால் அடர்த்தியான புருவம் வளரும்.

தீர்வு 04:

தேங்காய் எண்ணெய்

தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் தேங்காய் எண்ணெயை கண் இமைகளுக்கு அப்ளை செய்து வந்தால் அவை அடர்த்தியாக வளரும்.