முகத்தில் இருக்கும் தேமல் வெண் புள்ளிகள் மறைய இந்த பேஸ்டை பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Rupa

சரும பிரச்சனை என்று கருதப்படும் தேமல்,வெண் புள்ளிகள்,வெண் படை போன்ற பாதிப்புகள் பலருக்கும் இருக்கின்றது.இதை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ள தவறினால் உடல் முழுவதும் பரவிவிடும்.

இதுபோன்ற சரும பிரச்சனைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)கார்போ அரிசி – 50 கிராம்
2)பாதாம் பருப்பு – 25 கிராம்
3)காட்டு சீரகம் – 25 கிராம்
4)கருஞ்சீரகம் – 25 கிராம்
5)தேங்காய் – ஒரு துண்டு
6)நீராடி முத்து – 25 கிராம்
7)கசகசா – 25 கிராம்

கார்போ அரிசி,காட்டு சீரகம்,கருஞ்சீரகம்,நீராடி முத்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.சொல்லப்பட்டுள்ள அளவு படி வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் வடித்து ஆறவைத்த கஞ்சி ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் 50 கிராம் கார்போ அரிசி போட்டு நாள் முழுவதும் ஊற விடவும்.மறுநாள் அதை தண்ணீரில் அலசி வெயிலில் போட்டு நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளவும்.அடுத்து 25 கிராம் அளவு தேங்காய் துண்டு எடுத்து நன்கு உலர்த்தி பொடியாக்கி சேமித்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் பாதாம் பருப்பு,கருஞ்சீரகம்,காட்டு சீரகம்,நீராடி முத்து,கசகசா உள்ளிட்ட பொருட்களை தனி தனியாக லேசாக வறுத்துக் கொள்ளவும்.இந்த பொருட்கள் அனைத்தையும் தனி தனியாக அரைத்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணம் எடுத்து அரைத்த கார்போ அரசி பொடி ஒரு தேக்கரண்டி சேர்க்கவும்.அதன் பிறகு 10 கிராம் தேங்காய் பொடி,10 கிராம் காட்டு சீரகப் பொடி,10 கிராம் நீராடி முத்து பொடி,10 கிராம் அரைத்த கசகசா,10 கிராம்’பாதாம் பருப்பு பொடி,10 கிராம் கருஞ்சீரகப் பொடி சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை அதில் பிழிந்து விடவும்.எலுமிச்சைக்கு பதில் நார்த்தங்காய் சாறு அல்லது பெரிய நெல்லிக்காய் சாறு பயன்படுத்தலாம்.பொடியை பேஸ்டாக்கி சருமத்தில் காணப்படும் தேமல்,வெண் புள்ளி மீது அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.