சளி அடியோட வெளியேற இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!
பருவ மாற்றங்களாலும்,கால நிலைகளாலும் நாம் நிறைய உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர் கொள்கிறோம்.அதில் ஒன்று தான் சளி தொந்தரவு.சளியும் இருமலும் வந்து விட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல .
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி தொந்தரவினால் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் .
சளியை விரட்டும் எளிய வகைகள் இதோ :
1.உப்பு கலந்த சிறிய இஞ்சி துண்டுடன் துளசி இலையையும் சேர்த்து எடுத்து கொண்டால் சளி,இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
2.ஒரு டீஸ்பூன் நெய்யில் நான்கு அல்லது ஐந்து பூண்டு பற்களை பொறித்து எடுத்து சூடு ஆறுவதற்குள் சாப்பிட்டால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
3.சூடான பாலில் மஞ்சள் சேர்த்து பருகுவது சளியை போக்கும்.
4.பொதுவாகவே சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது ஆரோக்கியம் தரும் குழந்தைகள் ,பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால்.
5.மிளகு ஓர் அற்புதமான உணவுப் பொருள்.மிளகின் Immuno Modulating Effect காரணமாக தும்மல்,அலர்ஜியால் வரும் சளி(Sinusitis), ஆஸ்துமாவால் தங்கும் சளிக்கு உடனடியாகவும் நாட்பட்ட பலனையும் அளிக்கும்.சளி,இருமல் தொந்தரவு உள்ளவர்கள் ஒவ்வோர் உணவிலும் மிளகு சேர்ப்பது அவசியம்.
6.மதிய உணவில் தூதுவளை ரசம்,மிளகு ரசம் சேர்ப்பது நன்மை தரும்.
நம் வீட்டில் எளிதாக கிடைக்கும் பொருட்களை வைத்தே நோய் அணுகாமல் தடுத்து வைக்க முடியும்.இதை மனதில் கொள்வது நல்லது.